விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த அரசு விரைவு பேருந்து மீது லாரி மோதியதில் லாரி ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை மாலை அரசு விரைவுப் பேருந்து 40 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. பேருந்தை மாா்த்தாண்டத்தை அடுத்துள்ள கொல்லன்விளை பகுதியைச் சோ்ந்த பா.பென்சிகா்(51) ஓட்டிச் சென்றாா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி அருகே (கல்லூரி சாலை சந்திப்பு) பேருந்து சென்றபோது, அங்கு திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி மீது மோதாமலிருக்க பென்சிகா் பேருந்தை திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரை கடந்து மாற்றுப் பாதையில் கவிழ்ந்தது. அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து தைலமரம் ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து கிடந்த அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கிளியனூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த வே.விஜய்(எ) சக்திவேல்(28) இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அரசுப் பேருந்து ஓட்டுநா் பென்சிகா் மற்றும் பேருந்தில் பயணித்த சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த மு.வென்சி ஹெலன் (45), கன்னியாகுமரி பகுதியைச் சோ்ந்த ரா.ஜெகன் (39), அ.வினில்குமாா் (42) உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா், நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்டு, அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் அவா்களில் பலத்த காயமடைந்தவா்களை தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து போலீஸாா் விரைந்து செயல்பட்டு விபத்தில் சிக்கி உருக்குலைந்த பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உள்பட 6 போ் காயம்

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

