குஜராத்துக்கும் பாஜகவுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுவடைவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 28) தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
''குஜராத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான உறவு, தற்போது மேலும் ஆழமானதாகவும் முறியடிக்க முடியாததாகவும் மாறியுள்ளது!
மாநிலம் முழுவதும் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, தாலுகா பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களில், பாஜகவுக்கு கிடைத்திருக்கும் மகத்தான மக்கள் ஆதரவிற்கு மக்களிடம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாநில அரசின் வளர்ச்சிப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நல்லாட்சி அரசியலின் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக பாஜக மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளுக்கு, பொதுமக்கள் தங்கள் உளமார்ந்த நல்வாழ்த்துகளை வழங்கியுள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
வரும் காலங்களில், நாங்கள் இன்னும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றுவோம் என்றும் மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்லத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் குஜராத் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்'' என மோடி பதிவிட்டுள்ளார்.
Summary
Bond between Gujarat and BJP gets stronger PM Modi hails BJP's clean sweep in Gujarat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைவருக்கும் தரமான சுகாதார சேவை: பிரதமர் மோடி
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா: பிரதமர் மோடி

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



