தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா மதுராந்தகத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது:
''தவெக ஆட்சி அமைத்ததும் தினம் தினம் திமுகவினர் புலம்புகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினர் என்ன சேவை செய்தார்கள் என உதயநிதி கேட்கிறார். அவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா?
நடிகராக இருக்கும்போது, உச்ச நடிகராக இருந்தபோது அதனை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். ரசிகர் மன்றங்களை மக்கள் அமைப்பாக மாற்றி மக்களோடு மக்களாக சேவை செய்து முதல்வராகியுள்ளார் விஜய்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் 700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை மூடினார். எங்கள் கட்சியில் பல மூத்த அமைச்சர்கள் உள்ளனர். அவர்களிடம் கற்றுக்கொண்ட ஜூனியர் அமைச்சர்கள் நாங்கள். எங்கள் ஒருவரிடம் நீங்கள் கொள்கை பேசி ஜெயித்துவிட முடியுமா?
அம்பேத்கர், பெரியார், காமராஜர் என கொள்கைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் தயார்? நீங்கள் தயாரா? கருத்தியல் ரீதியாக மோதிப்பார்க்கலாம். வீண் பேச்சை தவிர்த்து, நிர்வாகத்தை சீரமைத்துக்கொண்டிருக்கும்போது கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் கேள்வி கேட்க கேட்க உங்கள் சாயம் வெளுக்கும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நான் பேசிய விடியோவைப் பார்த்துவிட்டு எனக்கு வாய்ப்பு கொடுத்து, அமைச்சராக நான் இந்த மேடையில் பேசுவதற்கு காரணம் பொதுச்செயலாளர் ஆனந்த். கடைகோடி தொண்டர்களை அதிகாரத்திற்கு கொண்டுவருதற்கு தவெகவை தவிர வேறு எந்த கட்சியில் இருக்கும் பொதுச்செயலாளராலும் முடியாது.
தவெகவில் மூத்த அமைச்சர்கள் இளைய அமைச்சர்களை சரிசமமாக நடத்துகின்றனர். இது வேறு எந்தவொரு கட்சியிலும் இல்லை.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல. வந்தாரை வாழவைப்பவர் முதல்வர் விஜய். எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை உருவாக்குவோம் என்று கூறினேன். அதனை பலர் விமர்சித்தனர்.
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனக் கூறினீர்களே. அதற்கு என்ன அர்த்தம்? மீண்டும் கூறுகிறேன். எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை நாங்கள் உருவாக்குவோம்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Is Udhayanidhi a freedom fighter Minister Ramesh speech in tvk meeting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு மாத காலத்தை நிறைவு செய்த விஜய் அரசு!
திருச்சியில் முதல்வர் விஜய் உரை - நேரலை

அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்தது தவெக: முதல்வர் விஜய்

எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம்: அமைச்சர் ரமேஷ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



