முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.
இதுமட்டுமின்றி முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தொடர்ந்து மாற்றி வருகிறது.
நான் முதல்வன்
அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு திமுக அரசால் மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் பெயரை, 'திறன் தமிழ்நாடு' என மாற்றம் செய்தது.
மகளிர் விடியல் பயணம்
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கானது. பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் இருந்து 'விடியல்' என்கிற சொல் நீக்கப்பட்டு, மகளிர் பயணம் என மாற்றப்பட்டது.
தாயுமானவர் திட்டம்
முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கி வந்த முதல்வரின் தாயுமானவர் திட்டம், பெயரிலிருந்த 'தாயுமானவர்' என்ற சொல் நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதல்வரின் காலை உணவுத் திட்டம்
அந்த வரிசையில் தற்போது முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை தற்போதைய தவெக அரசு மாற்றி வருகிறது.
விபி ஜி ராம்ஜி திட்டம்?
இதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன்பு நூறுநாள் வேலைத் திட்டத்தின் பெயரை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) விபி ஜி ராம்ஜி திட்டம் என மாற்றியதற்கு அருண்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால், தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு பாஜக பெயர் மாற்றம் செய்த அத்திட்டத்தின் பெயரை ஏற்றுக்கொள்வதாக தவெக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
TVK government to rename DMK schemes! How many so far
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










