வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வலுவான தூண்களாக பெண் சக்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 28) புகழாரம் சூட்டினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகளிர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 28) கலந்துகொண்டார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
''வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கு தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த இந்தியா குறித்து பேசினால், அதன் வலுவான தூண்களாக பெண் சக்தியே உள்ளது.
பெண்கள் பாதுகாப்பில் பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது. உங்கள் கண் முன்பே உத்தரப் பிரதேசத்தில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தபோது நமது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே மிகவும் கடினம்.
ஆனால், இப்போது பாஜக ஆட்சியில் வீட்டில் இருந்து புறப்படும் பெண்கள் குறித்து எதிர்மறையாகப் பேசினால், அதற்கான விளைவுகளை அவ்வாறு பேசுபவர்கள் உணரக்கூடும். பாரத நியாஜ சன்ஹிதாவும் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் தங்கள் பாதுகாப்பில் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இதன்மூலம், பெண்களுக்கு எதிரான மிகத் தீவிரமான குற்றங்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மேலும், மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் அவர்களுக்கான ஆலோசனை மையங்கள் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இன்று கூட மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் எனக் குறிப்பிட்டார்.
காசியின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காசியையும் அயோத்தியாவையும் இணைப்பை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Summary
Nari shakti is the strongest pillar of Viksit Bharat: PM Modi in Varanasi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிக்கிமில் ரூ. 4,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர்!
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை



