எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை, அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் மே 1 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே, சிலிண்டர் முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
ஈரான் - அமெரிக்க போர் தொடங்கிய பிறகு, வீட்டு உபயோக சிலிண்டர் விலைகள் ரூ.60 வரை உயர்ந்தது. வணிக சிலிண்டர்கள் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டது. அதாவது ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.196 முதல் ரூ.218 வரை நகரங்களுக்கு ஏற்ப விலை உயர்ந்தது.
அதாவது, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்து, அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய நகரங்களில் குறைந்தபட்சம் 21 நாள்கள் என்று இருந்தது தற்போது 25 நாள்கள் வரை உயர்த்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் இது 45 நாள்கள் வரை உயர்த்தப்படுகிறது.
ஏற்கனவே ஓடிபியை அடிப்படையாக வைத்து சிலிண்டர் விநியோகம் தற்காலிக அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இனி இது நிரந்தரமாக மாற்றப்படும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் சோதனையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுவரை வாடிக்கையாளர்கள் அடையாளத்தை உறுதி செய்யாவிட்டால் அவர்களுக்கு இ-கேஒய்சி அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பயோமெட்ரிக் உறுதி செய்தவர்கள் மீண்டும் அதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் உஜ்வாலா திட்டப் பயனாளர்கள் மட்டும் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் பயோமெட்ரிக் உறுதி செய்வது அவசியம்.
சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அவ்வாறு குழாய் மூலம் எரிவாயு சேவை பெறுவோர் சிலிணிடர்களை திரும்ப அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் சீராக இருக்க மத்திய, மாநில அரசுகள் முன் முயற்சி செய்து வருகின்றன.
Summary
New rules for cooking gas cylinder booking system from May 1!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் சாமானியா்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்
எரிவாயு சிலிண்டா் கட்டண முன்பதிவு மோசடி முறியடிப்பு: தில்லியில் இருவா் கைது

சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

