
மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்
தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெறும் என செங்கோட்டையன் பேச்சு
விசில் புரட்சி - சித்திரிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெற்றி பெறும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பழனியில் செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது, "தமிழகத்தை நாளை ஆளவிருக்கிற விஜய், இன்று திருச்செந்தூர் முருகனை வழிபட்டுச் சென்றிருக்கிறார்.
அவருடைய தொலைநோக்குச் சிந்தனை, நாளை தமிழகத்தை ஆள, மக்களால் ஒருமனதாக அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என எல்லோரின் எண்ணங்களாக இருக்கின்றன.
உலகளவில் இதுவரையில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி, சோசலிச புரட்சி நடந்துள்ளது. மே 4 ஆம் தேதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் புரட்சிதான் நடக்கவுள்ளது.
200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். யார் எத்தகைய கருத்துகளைக் கூறினாலும், தவெகவின் வெற்றியைத் தடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
Summary
KA Sengottaiyan states that the TVK will win in over 200 constituencies in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








