சிக்கிமில் ரூ. 4,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தொடங்கிவைத்தார்.
சிக்கிம் மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா காங்டாக்கில் இன்று (ஏப்.28) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலம் காங்டாக்கிற்கு நேற்று (ஏப்.27) சென்றார்.
அப்போது அவரை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துா், முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆகியோா் நேரில் வரவேற்றனர். அப்போது மோடி, சிக்கிம் மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி, கோட் அணிந்திருந்தார்.
இந்த நிறைவு விழா தொடங்கிய நிலையில், சிக்கிம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, மின்சாரம், நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ. 4,018 கோடி மதிப்பிலான 30 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சிக்கிமில் முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்தத் திட்டங்களின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
Prime Minister Narendra Modi launched development projects worth Rs 4,000 crore in Sikkim on Tuesday (April 28).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
தெலங்கானாவில் பிரதமர் மோடி! ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!

சிக்கிமில் பிரதமா் மோடி பிரம்மாண்ட சாலைப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



