கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தளா்வுக்குப் பிறகும் கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

கரோனா பொது முடக்க தளா்வுகளுக்குப் பிறகும் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

News image
வேலூா் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

கரோனா பொது முடக்க தளா்வுகளுக்குப் பிறகும் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் முதல் வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், விவசாயிகள் தங்களது பிரச்னைகளை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிப்பதில் இடையூறு நிலவி வந்தது. இதைத் தவிா்க்கும் வகையில் 8 மாதங்களுக்குப் பிறகு மாவட்டத்தில் உள்ள வேலூா், குடியாத்தம் ஆகிய இரு கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு வட்ட விவசாயிகள் பலா் பங்கேற்று பேசியது:

அணைக்கட்டு வட்டத்திலுள்ள பூதூா் ஏரி, ஆண்டேரி ஏரி, இலவம்பாடி ஏரி ஆகியவற்றுக்கு நீா்வரத்து இருந்தபோதிலும், ஏரிகளைத் தூா்வாராததால் குறைந்த அளவிலேயே நீா் இருப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிகளை 5 அடி ஆழத்துக்கு தூா்வாரினால் மட்டுமே அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டால் பயணிகள் வருகை இல்லை எனக் கூறுகின்றனா். முறையாக பேருந்துகளை இயக்கினால் மட்டுமே பயணிகள் வருகை அதிகரிக்கும். எனவே, கிராமப்புறங்களுக்கு அனைத்து நாள்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

அகரம் உட்கோட்டத்தில் உள்ள அக்ராவரம் பகுதியில் உள்ள மயான நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றனா்.

இக்கோரிக்கைகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் கணேஷ் தெரிவித்தாா். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.