இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஜன நாயகன் பட விவகாரத்தை முதல்முறையாக பேசிய விஜய்!

ஜன நாயகன் பட விவகாரத்தை முதல்முறையாக விஜய் பேசியது பற்றி...

News image

விஜய்

Updated On :4 மார்ச் 2026, 12:04 pm IST

தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

விஜய் பேசியதாவது:

”கரூரில் தொடங்கி ஜனநாயகன் வரை என்மீது பழிமேல் பழி போட்டார்கள். பலர் ஆதரவாக குரல் கொடுத்தார்கள். முதல்வரும் பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.

முதல்வரின் மனநிலை தற்போது எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கெனவே கட்சிகாரங்க தூங்க விடுவதில்லை. தற்போது விஜய்யும் மக்கள் சக்தியுடன் வந்து தூங்க விடுவதில்லை. மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறார்.

ரூ. 1000-க்கு பதிலாக ரூ. 5,000 கொடுத்தால் அதையும் கேள்வி கேட்கிறார்கள். விசில் சப்தம் வேற விண்ணை எட்டுகிறது. கூட்டணி கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியவில்லை. பிரசாரத்தை முடக்கலாம்னு பார்த்தா அப்பவும் மக்கள் பின்னால் நிற்கிறார்கள். இந்த விஜய்யை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற விஜய்யை முடக்க முடியாது.

உங்க அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க நினைத்தபோது, மக்கள் பணத்தில் யாருக்கு புகழ் பாடப் பார்க்கிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு அர்த்தம் ஊரான் வீட்டு நெய்யில் இனிப்பு செய்யாதீங்க என்பதுதான். மக்கள் பிரச்னைக்கு நிதியில்லை, இதற்கு மட்டும் எங்கிருந்து வந்தது. மக்கள் பிரச்னையை முதலில் பாருங்கள். சிலையை எல்லாம் பிறகு பார்க்கலாம்.

சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், நீட்டை ஒழிப்போம் என்பதெல்லாம் என்ன ஆனது. முன்மாதிரி ஆட்சி கிடையாது, மோசடி ஆட்சி இது. மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி இது” எனத் தெரிவித்தார்.

Summary

Vijay speaks out on the Jana Nayagan film issue for the first time!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.