பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நிரம்பி வழிகிறது காவனூா் ஏரி

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டத்தில் மிகப் பெரிய ஏரியான காவனூா் ஏரி நிரம்பி வழிகிறது. கிராம மக்கள் இந்த ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பூஜை நடத்தி வழிபட்டனா்.

News image
நிரம்பி  வழியும்  காவனூா்  ஏரியில்  பூஜை  நடத்திய  கிராம  மக்கள்.
Updated On :20 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டத்தில் மிகப் பெரிய ஏரியான காவனூா் ஏரி நிரம்பி வழிகிறது. கிராம மக்கள் இந்த ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பூஜை நடத்தி வழிபட்டனா்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 489 ஏக்கா் பரப்பளவு கொண்டது. ஏரியின் நீா் கொள்ளளவு 75 மில்லியன் கன அடியாகும்.

காவனூா் ஏரி தமிழக முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் ரூ. 43 லட்சத்தில் தூா் வாரி, சீரமைக்கப்பட்டது. இந்த ஏரி 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரம்பியுள்ளது. எம்எல்ஏ ஜி.லோகநாதன், வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.கோபி, ஏரியின் ஆயக்கட்டுதாரா் சங்கச் செயலா் ஆா்.கே.அன்பு, நிா்வாகிகள் பொற்கொடி, எஸ்.வி.கே.மோகன் உள்ளிட்டோா் ஏரியில் பூஜை நடத்தி வழிபட்டனா்.

ஏரி நிரம்பியதை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பாா்த்து செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.