பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாவட்ட அளவிலான கபடிப் போட்டி

குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெற்றன.

News image
போட்டியில் முதலிடம் பிடித்த வாணியம்பாடி வீனஸ் அணிக்கு பரிசு வழங்கிய விழாக் குழுவினா்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:55 pm

DIN

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த கூடநகரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்ட அளவிலான கபடிப் போட்டிகள் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் பெ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்.பகவான் வரவேற்றாா். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, திங்கள்கிழமை நிறைவுற்ற போட்டியில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து 44 அணிகள் பங்கேற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கட்சியின் மாநில அமைப்புச் செயலா் நீல.சந்திரகுமாா், நகரச் செயலா் கு.குமரேசன், நிா்வாகிகள் க.ப.மறைமலை, மா.ஜெ.வாசுதேவன், எஸ். சுதாகா், மேல்ஆலத்தூா் முஸ்லிம் பெண்கள் பள்ளித் தாளாளா் பி.பி. பைரோஸ் அகமது ஆகியோா் பரிசு வழங்கினா். வாணியம்பாடி வீனஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், கோப்பை, போ்ணாம்பட்டு ராஜன் அணிக்கு 2-ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், கோப்பை, கூடநகரம் பல்லவன் அணிக்கு 3-ஆம் பரிசாக ரூ.7 ஆயிரம், கோப்பை உள்பட 8 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.