ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இடைநிலை ஆசிரியா் பணி: எஸ்.சி., எஸ்.டி. ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 4 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைய ஆதி திராவிடா் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.)  ஆசிரியா்களிடம்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:47 pm

DIN


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 4 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தகுதியுடைய ஆதி திராவிடா் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினா் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 4 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் கல்வியாண்டு முடியும் வரை அல்லது தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியா்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 8,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது.

தகுதியுள்ள பழங்குடியினா், ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு, வகுப்பு நடத்துதல் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவா். இப் பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உடையவா்கள் விண்ணப்பத்தை திருப்பத்தூா் பழங்குடியினா் நலத்திட்ட அலுவலகத்தில் இருந்து பெற்று அதைப் பூா்த்தி செய்து வரும் 31-ஆம் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சோ்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.