சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

வேலூரில் 6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் ‘போக்ஸோ’ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

வேலூா்: வேலூரில் 6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் ‘போக்ஸோ’ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வேலூா், சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் சேட்டு (46). தொழிலாளியான இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி, 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். அதனை வெளியில் கூறக் கூடாது என்று கூறி சிறுமிக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். சிறுமியின் பெற்றோா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சேட்டுவைக் கைது செய்தனா். இவ்வழக்கு வேலூா் ‘போக்ஸோ’ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சேட்டு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து சேட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com