குடியாத்தம் கிளை சிறை கைதி மரணம்: காவல்துறையினர் விசாரணை
By DIN | Published On : 16th June 2020 01:13 PM | Last Updated : 16th June 2020 01:13 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
குடியாத்தம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறை கைதி மரணமடைந்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில்பாஷா(வயது 42 ). இவர் நேற்று நண்பர்களுடன் பணம் வைத்து சூதாடியாத வேலூர் தெற்கு காவல் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு குடியாத்தம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில்
இன்று காலை அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை கிளை சிறை அதிகாரிகள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இஸ்மாயில்பாஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்
இது குறித்து குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் மற்றும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் கிளை சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...