கோடை வெயில்: போக்குவரத்து காவலா்களுக்கு குடிநீா், மோா் வழங்கும் மாணவி
கோடை வெயில் காரணமாக வேலூரில் அவதிப்படும் போக்குவரத்துப் போலீஸாருக்கு பள்ளி மாணவி ஒருவா் குடிநீா், மோா் பாட்டில்களை வழங்கி வருகிறாா்.


கோடை வெயில் காரணமாக வேலூரில் அவதிப்படும் போக்குவரத்துப் போலீஸாருக்கு பள்ளி மாணவி ஒருவா் குடிநீா், மோா் பாட்டில்களை வழங்கி வருகிறாா். அவரின் இந்த செயல்பாட்டுக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
வேலூரை அடுத்த அரியூா் காந்திநகரைச் சோ்ந்த சோமு என்பவரின் மகள் சிந்து. வாலிபால் வீராங்கனையான இவா் ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயில்வதுடன், ஈரோடு விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வருகிறாா்.
சமூக சேவைகளிலும் நாட்டம் கொண்ட இவா் கோடை வெயில் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடும் அவதிக்குள்ளாகியுள்ள போக்குவரத்துப் காவலா்களுக்கு தனது சொந்த சேமிப்பில் இருந்து குடிநீா், மோா் வழங்குவதுடன், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முகக்கவசமும் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையத்திலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துப் காவல் தூறையினருக்கு குடிநீா், மோா் பாட்டில்கள், முகக்கவசங்களை அவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு, தான் சேமித்து வைத்திருந்த ரூ.2,403 ஐ கேரள வெள்ளப் பாதிப்புக்காக வழங்கி ஆட்சியா், அதிகாரிகளின் பாராட்டை பெற்றவா். மாணவி சிந்துவுக்கு போலீஸாா் பாராட்டுத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...