காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிஎஸ்கே அணிக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர்!

சிஎஸ்கே அணிக்கு புதியதாக நியமிக்கப்படவிருக்கும் ஃபீல்டிங் பயிற்சியாளர் குறித்து...

Former England keeper James Foster set to join CSK as fielding coach for IPL 2026: Report (Credit: X/The Hundred)

ஜேம்ஸ் ஃபோஸ்டர் - படம்: எக்ஸ் / தி ஹண்ட்ரெட்

Published On :

சிஎஸ்கே அணிக்குபுதியதாக ஃபீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஃபோஸ்டர் நியமிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனும் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. தோனிக்குப் பிறகு புதியதாக ருதுராஜ் கெய்க்வாய் கேப்டனாக தேர்வானார்.

சிஎஸ்கே அணி கடந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடியது. தொடரின் பின் பகுதியில் இளம் வீரர்கள் சிஎஸ்கே அணியில் இணைந்து சிறப்பாக விளையாடினார்கள்.

தற்போது, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஃபோஸ்டர் ஃபீல்டிங் பயிற்சியாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் இங்கிலாந்துக்காக, 7 டெஸ்ட், 11 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாடியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் சிஎஸ்கே சிஇஒ காசி விஸ்வநாதன், “பீல்டிங் பயிற்சியாளரைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். அவர் அணியில் சேருவார் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஜேம்ஸ் ஃபோஸ்டர் முன்னதாக கேகேஆர் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். மேலும், டெசர்ட் வைபர்ஸ், நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ், பெஷாவர் ஜால்மி ஆகிய அணிகளிலும் பணியாற்றியுள்ளார்.

பேட்டிங் பயிற்சியாளராக மைக்கல் ஹசி, எரிக் சிம்மன்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளரகாவும் சித்தார்த் ஸ்ரீராம் துணை பந்துவீச்சு பயிற்சியாளராகவும் ரஸல் ராதாகிருஷ்ணன் அணியின் மேலாளராகவும் இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணியினர் ஏற்கெனவே தங்களது பயிற்சியைத் தொடங்கிவிட்டார்கள். ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பை முடித்துவிட்டு அணியின் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் இரண்டு கட்டமாக நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.

பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா வருவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், மைக்கல் ஹசியே தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

James Foster set to join CSK as fielding coach.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.