

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் பயிற்சி செய்து வரும் விடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த விடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் வாரியமும் சிஎஸ்கே அணியும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளன.
ஜார்க்கண்டைச் சேர்ந்த எம்.எஸ்.தோனி (44 வயது) ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சில சீசன்களாகவே முட்டி வலியால் அவதிப்பட்டு வரும் தோனி 2026 சீசனில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
தன்னுடைய உடல்நலனைப் பொறுத்தே இந்த முடிவு எடுப்பேன் என அவர் கூறியுள்ளதால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கினால்தான் இது உறுதியாகும்.
போட்டிகளில் முழுமையாக ஆடாமல், இம்பாக்ட் வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனை எடுத்திருப்பதால் கீப்பிங்கில் தோனி இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரலில் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு, எம்.எஸ்.தோனி தற்போதே பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
சிஎஸ்கே பகிர்ந்த விடியோவில் அதே பழைய மஞ்சள் நிற பேட்டிங் பேட் (pad) அணிந்திருப்பதைக் குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சென்டிமென்டாக தோனி இன்னமும் பழைய பேட்டிங் பேடை பயன்படுத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.