

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வாகாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7ஆம் தேதி முதல் இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) தற்போது பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஸ்மித் டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
டெஸ்ட்டில் 10,000 ரன்களைக் கடந்து, தலைசிறந்த வீரராகப் பெயர் எடுத்துள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆஸி. டி20 அணியில் நீண்ட காலமாக இடம் கிடைக்காமல் இருக்கிறது.
பிபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 4 சதங்களை விளாசியுள்ளார். மற்ற பேட்டர்களை விட அதிகமான சராசரி, அதிக ஸ்டிரைக் ரேட்டுடனும் விளையாடி வருகிறார்.
ஆஷஸ் போட்டிகளுக்குப் பிறகு பிபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 19* (16), 100 (42), 54 (40), 37 (24), 65 (43) ரன்கள் எடுத்து, சிட்னி சிக்ஸர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றியுள்ளார்.
கடைசி 10 இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் 663 ரன்கள், சராசரி 94.7, ஸ்டிரைக் ரேட் 180+ உடன் விளையாடி வருகிறார்.
2023 ஆம் ஆண்டுக்கு முன்பாக சராசரி 30ஆக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தற்போது 50ஆக இருக்குமாறு விளையாடி வருகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸி. அணியில் ஸ்டீவ் ஸ்மித்தை எடுக்க வேண்டுமென முன்னாள் வீரர் மார்க் வாக் கூறிவரும் நிலையில், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ரசிகர்களின் எண்ணமும் அதுவேகவே இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.