

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை நான்கு சதங்களை விளாசியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இல்லாத நிலையில், மீண்டும் தேர்வாகுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) பிபிஎல் டி20 தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2023 முதல் பிபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 699 ரன்கள் விளாசியுள்ளார். இதில் சராசரி 87.37ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 177.41ஆக இருக்கிறது.
மொத்தமாக 4 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்த மாதிரியான ஃபார்மில் இருந்து ஆஸி. டி20 அணியில் ஸ்மித் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலிய தனது முடிவை மாற்றி ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் இணைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.