

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கார்சிஸ் அணியும் இன்று (ஜன.25) இந்திய நேரப்படி மதியம் 1.45க்கு மோதுகின்றன.
இந்தப் போட்டியில் சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை பெர்த் ஸ்கார்சிஸ் வீரர் பியர்ட்மேன் வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரட் லீ என ரசிகர்களால் அழைக்கப்படும் மஹ்லி பியட்ர்மேன் (20 வயது) மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
பிபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்த பியட்ர்மேன் பிரட் லீயின் செயின்ஷா கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவர் குறித்து ஆரோன் பின்ச், “கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் பிடித்ததே வேகமாக ஓடிவந்து பந்துவீசுவது பந்துவீசுவது மட்டுமல்ல. சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து பந்துவீசுகிறார்.
எப்போது மெதுவான பந்து வீச வேண்டும் என்பதை இள வயதிலேயே அறிந்து வைத்துள்ளார். அவரது ஆர்வம் பிடித்துள்ளது. அவரது பிரட்லீயின் கொண்டாட்டமும் பிடித்திருந்தது” என்றார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் பெர்த் ஸ்கோசேர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் ஐந்து முறை மோதியுள்ளனர்.
இந்தப் போட்டிகளில் 3 முறை பெர்த் ஸ்கோசேர்ஸ் அணியும் 2 முறை சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் வென்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.