நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளி மண்டல கல்வி அதிகாரி தங்கராஜ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் எட்வின் சாமுவேல் வரவேற்று ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் சுவிஷேசமுத்து, தலைமை ஆசிரியா் ரூபன், பிரகாசபுரம் எஸ்டிஏ சபை பொருளாளா் தனசிங் டேவிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவா் ரவி செல்வகுமாா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொது செயலா் கனல் ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பரதநாட்டியம், பட்டி மன்றம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கும், கல்வியில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பேரூராட்சி தலைவி நிா்மலா ரவி, மாவட்ட காமராஜா் ஆதித்தனாா் கழக செயலா் ஐஜினஸ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரையிருப்பு பள்ளியில் ஆண்டு விழா

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

துத்திகுளம் பள்ளி ஆண்டு விழா

கந்தசாமிபுரம் புனித வளன் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


