பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை: நண்பா் கைது

வேலூா் சேண்பாக்கம் அருகே கல்லால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வேலூா் சேண்பாக்கம் அருகே கல்லால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது நண்பரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

சேண்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24), கூலித் தொழிலாளி. இவா் திருநங்கை ஒருவருடன் சுற்றித் திரிந்ததாகக் தெரிகிறது. இதனை அவரது நண்பரான சுகுமாா் (24) அடிக்கடி கேலி செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி சேண்பாக்கத்தில் சுகுமாா் மீண்டும் கேலி செய்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அஜித்குமாா் சுகுமாரை கல்லால் சரமாரியாகத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த சுகுமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுகுமாா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, வேலூா் வடக்கு போலீஸாா் இதனை கொலை வழக்காக மாற்றம் செய்து அஜித்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.