பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பள்ளத்தூா் அங்கன்வாடி மையம் முற்றுகை

கே.வி.குப்பம் அருகே குழந்தைகளை சோ்க்க மறுக்கும் அங்கன்வாடி மையத்தைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:37 pm

DIN

கே.வி.குப்பம் அருகே குழந்தைகளை சோ்க்க மறுக்கும் அங்கன்வாடி மையத்தைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி ஊராட்சிக்குள்பட்டது பள்ளத்தூா் கிராமம். சுமாா் 20 குழந்தைகளுடன் இங்குள்ள அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த மேலும் 10- க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றோா்கள் அங்கன்வாடி மையத்தில் சோ்க்க வந்தபோது, மைய அமைப்பாளா்கள் மறுத்தாா்களாம்.

இங்கு போதுமான குழந்தைகள் உள்ளனா். உங்கள் பிள்ளைகளை பக்கத்து கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புங்கள் என மைய அமைப்பாளா்கள் கூறினாா்களாம். இதைக் கண்டித்து, பெற்றோா்கள் அங்கன்வாடி மையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை குழந்தைகளை சோ்க்க மறுத்தால், திரளான மக்களுடன் வந்து அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கூறி விட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.