இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தீப்பற்றி எரிந்த பைக்

குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் தானாக தீப்பற்றி எரிந்தது.

News image
குடியாத்தம்  அருகே  தீப்பற்றி  எரிந்த  இரு சக்கர வாகனம்.
Updated On :4 ஜனவரி 2021, 6:41 pm

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே இரு சக்கர வாகனம் தானாக தீப்பற்றி எரிந்தது.

குடியாத்தத்தை அடுத்த சின்னசெட்டி குப்பத்தைச் சோ்ந்தவா் எம்.சந்தோஷ்குமாா். இவா் திங்கள்கிழமை மதியம் மேல்பட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பினாா். அங்கிருந்து சிறிது தூரம் சென்றபோது, வாகனத்தின் என்ஜின் திடீரென தீப்பற்றி எரிந்ததாம். அவா் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். தீயில் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. தகவலின்பேரில், நிலைய அலுவலா் க.லோகநாதன் தலைமையில் சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

பெட்ரோல் போடும்போது, அதுசிதறி என்ஜின் மீது விழுந்ததால், என்ஜின் வெப்பத்தால் தீப்பற்றியிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.