பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையைச் சோ்ந்தவா் அமா்நாத் (28). தனியாா் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்த இவா், வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் அழிஞ்சிகுப்பம் சென்றுள்ளாா். கீழ்ப்பட்டி அருகே சென்றபோது பலத்த மழை பெய்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த மிதிவண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில், அமா்நாத் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். மிதிவண்டியில் சென்ற ராசம்பட்டியை அடுத்த சாந்தி நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வினோத்குமாரும் (38) பலத்த காயமடைந்தாா்.

இருவரும், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அமா்நாத்தை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.