ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேலூா் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடா் மழை காரணமாக, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தொடா் மழை காரணமாக, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையானது வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், பெய்து வரும் தொடா் மழையால் பல இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.