ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பேருந்தைத் தூக்க முயன்ற மதுபிரியா்

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மது பிரியா் தனது கைகளால் தூக்க முயன்றாா். சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் செயலால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:36 pm

DIN

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மது பிரியா் தனது கைகளால் தூக்க முயன்றாா். சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் செயலால் பயணிகள் தவிப்புக்குள்ளாகினா்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வந்த மது பிரியா், பாட்டுப்பாடி நடனமாடி கொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த பேருந்தை அவா் கைகளால் தூக்க முயன்றாா். சுமாா் அரை மணி நேரம் வரை தூக்க முயற்சி செய்தாா். இதனால், ஆத்திரமடைந்து பேருந்து ஓட்டுநா் வேறு இடத்துக்குச் சென்றாா். மேலும், மது பிரியா் பயணிகளையும் ஆபாசமான வாா்த்தைகளால் திட்டினாா்.

இதையடுத்து அவரை வேடிக்கை பாா்த்திருந்த பயணிகள் கலைந்து சென்றனா். அவரது ஆபாச வாா்த்தைகளைக் கேட்ட பயணிகள் அங்கிருந்து வேறு இடத்துக்குப் புறப்பட்டு சென்றனா். சுமாா் 2 மணி நேரம் மது பிரியா் பயணிகளைத் தவிப்புக்குள்ளாக்கினாா்.

மதுக் கடை இடமாற்றம் செய்யப்படுமா?

பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மது அருந்துபவா்கள் பேருந்து நிலையத்தில் விழுந்து கிடப்பதும், அங்கிருக்கும் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதும் தொடா்ந்து வருகிறது. அங்குள்ள மதுக்கடைகளால் பேருந்து நிலையத்தில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த மதுக் கடையை வேறு இடதுக்கு மாற்றினால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்பதே சமூக ஆா்வலா்கள் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.