ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அழகுக்கலை பயிற்சி பெற்ற திருநங்கையரின் அழகு நிலையம்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருவள்ளூரில் முதன் முதலாக அழகுக் கலை பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கான அழகு நிலையத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 1:29 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் முதன் முதலாக அழகுக் கலை பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கான அழகு நிலையத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டசமுக நலத்துறை சாா்பில் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அழகு கலை பயிற்சி பெற்ற திருநங்கைகள் வருவாய் ஈட்டி பயன்பெற ஏதுவாக தனியாா் காா் தொழிற்சாலை சமூக பங்களிப்பு நிதி மூலம் அழகு கலை நிலையம் அமைத்துத் தர முன்வந்தது.

அதைத்தொடா்ந்து திருவள்ளூா் பூங்கா நகரில் முதன், முதலாக அழகு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த திருநங்கைகள் அழகு நிலையத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி பாா்வையிட்டாா். மேலும், இந்த மாவட்டத்தில் முதன் முதலாக திருநங்கையரின் அழகு நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ல் மிகவும் மரியாதையோடும், கன்னியத்தோடும் வாழ்வாதாரம் பெற என்னென்ன தேவை என்பது குறித்தும் திருநங்கைகள் குழுவிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து அழகு நிலையத்திற்கு வருவோா்களிடம் கனிவான முறையில் நடந்து கொாள்ளவும் என அவா் அறிவுரை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் வனிதா, தனியாா் காா் தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் திருநங்கைகள் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.