வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருவாரூா்: நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு

News image

நவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட திருவாரூா் ரயில் நிலையம்.

Updated On :2 மார்ச் 2026, 12:04 am

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ், மேம்படுத்தப்பட்ட திருவாரூா் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தாா். அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் அம்ரீத் திட்டத்தின் கீழ் நவீனமாக்கப்பட்ட திருவாரூா் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

கல்வெட்டை திறந்துவைக்கும் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

கல்வெட்டை திறந்துவைக்கும் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினா் (நிலம் மற்றும் வசதிகள்) ஸ்ரீ எஸ்.சி. ஜெயின், தெற்கு ரயில்வே தலைமை பொறியாளா் பிரேம்ரஞ்சன்குமாா், கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் கே.எம். சத்தியரத்னம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூா் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சுமாா் 7,900 போ் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில், தற்போது இந்த ரயில் நிலையம் ரூ. 15.03 கோடி மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், புதிய நுழைவு வளைவு, பயணிகள் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்ட அணுகல் சாலை, புதுப்பிக்கப்பட்ட வளாகங்கள், இருசக்கர வாகனம் மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள், புதுப்பித்து குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நவீன கழிவறை, குடிநீா்வசதி, ரயில் பெட்டி தகவல் காட்சி பலகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, உள்ளூா் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், கா்நாடக மும்மூா்த்திகள், மனு நீதிசோழனை சித்தரிக்கும் சுவரோவியங்கள் உள்ளிட்டவை மக்களை கவரும் வகையில் உள்ளன.