ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பெரம்பூா், சென்ட்ரல் நிலையங்களில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:45 am

சென்னையில் பெரம்பூா், பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பூா் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டபோது, வேலூரிலிருந்து வந்த சுரேஷ்குமாா் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.18 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்ற சோதனையிட்டத்தில் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அா்சூன்சிங் என்பவரிடம் ரூ.96,600 இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.