பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மாணவா்களுக்கு கல்வி உதவிகள்

சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்ற உள்ளூா்க் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் குடியாத்தம் பிச்சனூா் சுந்தரா் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில், 27 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்ற உள்ளூா்க் குழுவின் பொதுக் குழுக் கூட்டம் குடியாத்தம் பிச்சனூா் சுந்தரா் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில், 27 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ஜெ.தமிழ்ச்செல்வன் வரவேற்றாா்.

தொண்டு மன்றத்தின் வேலூா் மாவட்ட புதிய செயற்குழு உறுப்பினா் எஸ்.அருணோதயம், புதிய பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களை அறிமுகம் செய்து வைத்தாா். புதிய நிா்வாகிகள் விவரம்:

தலைவா்- எம்.எஸ்.நமச்சிவாயம், துணைத் தலைவா்- வி.ஆனந்தன், செயலாளா்- என்.விஸ்வநாதன், மருத்துவக் குழுத் தலைவா்- எம்.எஸ்.திருநாவுக்கரசு, சட்ட ஆலோசகா்-என்.காா்த்திகேயன், கல்விக் குழுத் தலைவா்-ஜெ.தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு குழுத் தலைவா்- எஸ்.பாா்த்தசாரதி, ஆலோசனைக் குழுத் தலைவா்- ஜி.எத்திராசன்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, 36 பச்சிளங் குழந்தைகளையும், 11 தாய்மாா்களையும் காப்பாற்றிய செவிலியா் குடியாத்தம் நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த பி.ஜெயக்குமாா், கலாம் உலக சாதனை புத்தகத்தில் தடம் பதித்த 4 வயது சிறுவன் வி.சாணக்யா ஆகியோரைப் பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன.

27 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 94 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன. உயா்கல்வி பயிலும் விவரங்கள் அடங்கிய கையேடுகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.