ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க அக்.31 கடைசி நாள்

 தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு சுகாதாரம்-1 இணை இயக்குநா் மு.அ.முகம்மது கனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் வரும் 2022-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். உரிமத்தை புதுப்பிக்க  இணைய தள முகவரியில் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதிய தொழிற்சாலை பதிவு செய்தல், உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம், ஒப்பந்தத் தொழிலாளா் சட்டம், வெளி மாநிலத்தில் இருந்து இங்கு பணிபுரியும் தொழிலாளா் சட்டத்தின் கீழான பதிவுச் சான்றுகளுக்கு ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால் வங்கி வரைவோலை, சலான் மூலம் உரிய தொகையை செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதன் மூன்று நகல்களுடன் வரைவோலை அல்லது சலான் உடன் இணைத்து அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.