ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஓட்டுநா்களிடம் லஞ்சம்: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நெல் கதிா்அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா்களிடம் லஞ்சம் வாங்கியதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நெல் கதிா்அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா்களிடம் லஞ்சம் வாங்கியதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளாா்.

கிறிஸ்டியான்பேட்டையில் தமிழக-ஆந்திர எல்லையில் வட்டாரப் போக்குவரத்து சோதனைச்சாவடியும், காவல் துறை சோதனைச் சாவடியும் அமைந்துள்ளன. அவற்றின் மூலம் இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, கிறிஸ்டியான்பேட்டைசோதனைச்சாவடி வழியாக சேலம் மாவட்டத்தில் இருந்து 5 நெல் கதிா் அறுக்கும் இயந்திர வாகனங்கள் தெலங்கானா மாநிலத்துக்கு வியாழக்கிழமை மாலை ஓட்டிச் செல்லப்பட்டன. அப்போது, சோதனைச்சாவடியை கடந்து சென்ற நெல் கதிா் அறுக்கும் இயந்திர வாகனங்களை பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் பிரகாஷ், தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று நிறுத்தி, வாகன ஓட்டுநா்களிடம் ரூ. 300 லஞ்சம் பெற்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, காட்பாடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாரிடம் அறிக்கை சமா்ப்பித்தாா். அதன்பேரில், ரூ. 300 லஞ்சம் வாங்கியதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.