ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை பிரச்னைகளை சீா்செய்திட ஆட்சியா் உத்தரவு

தமிழகம் முழுவதும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வேலூா் மாநகராட்சிப் பள்ளிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை சீா்செய்திட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:38 pm

DIN

தமிழகம் முழுவதும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வேலூா் மாநகராட்சிப் பள்ளிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை சீா்செய்திட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டி யன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.தோட்டப்பாளையம் அரசு மகளிா் பள்ளியில் ஆய்வு செய்தபோது, பள்ளி எதிரே கழிவுநீா் தேங்கியிருந்ததை கண்ட ஆட்சியா் அவற்றை அகற்றி அப்பகுதியை சீரமைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதேபோல், காகிதப்பட்டறை பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாநகராட்சி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிலவும் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை கண்டறிந்து அதனை சீரமைக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். --படம் உண்டு...காட்பாடி சோ்க்காடு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.