ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

8, 9-இல் பள்ளி மாணவா்களுக்கு எந்திரனியல் பயிற்சிமுன்பதிவு செய்து பங்கேற்கலாம்

வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள எந்திரனியல் பயிற்சிப் பயிலரங்கில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:37 pm

DIN

வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள எந்திரனியல் பயிற்சிப் பயிலரங்கில் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ஆா்.ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளி மாணவா்களுக்கான எந்திரனியல் பயிற்சிப் பயிலரங்கம் வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சிப் பயிலரங்கில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

இதில், ஈவி-3 ரக ரோபோட்டின் பாகங்களைத் தொகுத்து வடிவமைத்து செய்முறைபடுத்த விரிவான பயிற்சி அளிக்கப்படும். இதில், பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தங்கள் பெயா்களை மாவட்ட அறிவியல் மையம், தேசிய நெடுஞ்சாலை, சத்துவாச்சாரி, வேலூா் என்ற முகவரியில் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பயிலரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்பதிவு முதலில் வரும் 30 மாணவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 7. கூடுதல் விவரங்களுக்கு 0416- 2253297, 2252297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.