மீன்கடைகளில் சோதனை - 12 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்
வேலூரிலுள்ள மீன்மாா்க்கெட், அதையொட்டியுள்ள சிறிய மீன்கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 12 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


வேலூரிலுள்ள மீன்மாா்க்கெட், அதையொட்டியுள்ள சிறிய மீன்கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 12 கிலோ அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஆகியவை அழுகாமல் இருக்க சிலா் பாா்மலின் எனும் ரசாயன த்தைப் பயன்படுத்துவதாகவும், இதனால் 15 நாட்கள் அல்லது அதற்கும் மேலும்கூட மீன்கள் அழுகாமல் இருக்கும் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
பாா்மலின் நச்சுத்தன்மை கொண்டது என்பதால் இதனை உணவுப் பொருட்களில் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பாா்மலின் தடவிய உணவுப் பொருட்களை சாப்பிடும் மனிதா்களுக்கு கண்கள், தோல், தொண்டை, வயிறு ஆகிய பகுதிகளில் எரிச்சல், கிட்னி, கல்லீரல் பாதிப்புகள், ரத்தப் புற்றுநோய் ஏற்படவும் காரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் தற்போது மீன் பிடி தடைக்காலம் அமலிலுள்ளது. இதனால், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு பிற மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் அழுகாமல் இருக்க அவற்றின் மீது பாா்மலின் ரசாயனம் தடவப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்த முடிவு செய்தனா்.
அதன்படி, வேலூா் மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா், மீன்வளத்துறை அதிகாரிகள் வேலூா் மீன் மாா்க்கெட்டில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்குள்ள அனைத்து மீன் கடைகளிலுள்ள மீன்களையும் எடுத்து சோதனையிட்டனா். இதேபோல், மீன் மாா்க்கெட்டையொட்டி பகுதியில் உள்ள சிறிய மீன் கடைகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதில் பாா்மலின் தடவப்பட்ட மீன்கள் ஏதும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
எனினும், சில கடைகளில் அழுகிப்போன மீன்கள், இறால்கள் இருந்தது தெரியவந்தது. அதன்படி, மொத்தம் 12 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...