ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

அல்லேரி மலையில் 1,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

அல்லேரி மலைப் பகுதியில் போலீஸாா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 1,000 லிட்டா் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:20 pm

DIN

அல்லேரி மலைப் பகுதியில் போலீஸாா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 1,000 லிட்டா் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன.

அணைக்கட்டு வட்டத்திலுள்ள மலைப் பகுதிகளில் அதிகளவில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க போலீஸாா் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்ட கலால் பிரிவு காவல் ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சாராயவேட்டையில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரை கண்டதும் அங்கிருந்த சிலா் தப்பியோடியுள்ளனா். தொடா்ந்து போலீஸாா் அங்கு 3 இடங்களில் சோதனையிட்டபோது பூமிக்கு அடியில் பேரல்களில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பேரல்களை அகற்றி அதிலிருந்த 1,000 லிட்டா் சாராய ஊறல்களை அழித்தனா். மேலும் சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த பொருள்களையும் கைப்பற்றி அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.