பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா குறித்து...

குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On :

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் புகழ்பெற்ற பரிகார திருத்தலம் ஆகும். இந்தக் கோயில் முன்பாக செல்லும் சுரபிநதியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சனீஸ்வரா் பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியாகிறாா். இதற்காக, குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தில் காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. சரியாக காலை 8.26 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்வை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் லாட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.

Summary

Sani Peyarchi festival at Kuchanur Saneeswarar Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.