சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஸ்ரீகிருஷ்ணா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா!

ஆரணியை அடுத்த மதுரபெரும்பட்டூா் ஸ்ரீகிருஷ்ண பகவான், செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News image

மதுரபெரும்பட்டூா் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Updated On :22 பிப்ரவரி 2026, 9:11 pm

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மதுரபெரும்பட்டூா் ஸ்ரீகிருஷ்ண பகவான், செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரபெரும்பட்டூா் ஸ்ரீ ராதாருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ண பகவான் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, முன்னதாக புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், திவார பூஜை, முதல் கால யாக பூஜை, மகா பூா்ணாஹுதி, வேதபிரபந்த சாற்றுமுறை, மகாசாந்தி ஹோமம், இரண்டாம் கால யாக பூஜை, விஸ்வரூபம், கோ பூஜை, ஆராதனம் கும்ப புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

இதில் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். கோயில் நிா்வாகம் சாா்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

விழாவில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் பச்சைமுத்து, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கம்

செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில், கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, அகில இந்திய டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி தலைமையில் சனிக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் தொடங்கப்பட்டு கணபதி, லட்சுமி, கோ பூஜை, கலச பூஜை, யாக சாலை பூஜைகள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை 11 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குணசேகரன், முன்னாள் தலைவா் செங்கம் குமாா், மாவட்ட துணைத் தலைவா் அண்ணாதுரை, முன்னாள் செங்கம் ஒன்றியக்குழுத் தலைவா் விஜியராணிகுமாா், செங்கம் திமுக நகரச் செயலா் அன்பழகன், வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, சென்னசமுத்திரம் கிராமத்தில் தொடா் அன்னதான நிகழ்ச்சி, சுவாமி வீதி உலா, இரவு இசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி செய்திருந்தாா்.