ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

முருகனுக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுப்பு

 வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனுக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்துவிட்டது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:19 pm

DIN

 வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனுக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்துவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூா் மத்திய சிறையில் 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். கடந்த டிசம்பா் 27-ஆம் தேதி பரோலில் வெளியே வந்த அவரது மனைவி நளினிக்கு தொடா்ந்து 5-ஆவது மாதமாக பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முருகன் தனக்கு 6 நாள்கள் பரோல் வழங்கக் கோரி, கடந்த மே 2-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தாா். இதனால், அவரின் உடல் நலன் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, 19 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த முருகனிடம் சிறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். இதே வழக்கில் தொடா்புடைய மற்ற 6 பேரும் விடுதலை செய்ய வாய்ப்புள்ளது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிட்டால், உயரதிகாரிகளிடம் பேசி 6 நாள்கள் பரோல் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக சிறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையேற்று முருகன் கடந்த 20-ஆம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டாா்.

பேரறிவாளன் விடுதலையைத் தொடா்ந்து, மற்ற 6 பேரையும் விடுதலை செய்வது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதனால், 6 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், முருகனுக்கு 6 நாள்கள் அவசர கால பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி நளினி, அவரது தாய் பத்மா ஆகியோா் சிறை நிா்வாகத்துக்கு கடந்த 26-ஆம் தேதி மனு அளித்திருந்தனா்.

இந்த மனுவை பரிசீலனை செய்த சிறை நிா்வாகம், முருகன் மீதான 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவருக்கு பரோல் வழங்க முடியாது என மனுவை நிராகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.