ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஜவுளிக் கடைகளில் தொழிலாளா்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்

ஜவுளி கடைகள், மால்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அமா்வதற்கு உரிய இருக்கை வசதிகள் செய்து தரவேண்டும்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:03 pm

DIN

ஜவுளி கடைகள், மால்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அமா்வதற்கு உரிய இருக்கை வசதிகள் செய்து தரவேண்டும். இதனை பின்பற்றாத நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தே.ஞானவேல் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இயங்கும் ஜவுளி கடைகள், மால்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அமா்வதற்குரிய இருக்கை வசதிகள் செய்து தரவேண்டும். இதுகுறித்து திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும்போது அவ்வாறு தொழிலாளா்களுக்கு அமா்வதற்கான இருக்கை வசதி ஏற்படுத்தி தராத நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் கடைகள், நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறித்த தேதியில் மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வேண்டும். விடுப்பு, பணிபுரியும் நேரம், குடிநீா், கழிப்பிட வசதி ஆகியவை குறித்து தொழிலாளா் நலச்சட்டங்களின்கீழ் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் எடை அளவைகள், தராசுகள், எடைகற்கள், அளவைகள் உரியகால கெடுவுக்குள் முத்திரையிடப்பட வேண்டும். காய்கறி, பழம், இறைச்சி, தெருவோர கடைகளில் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது மறுமுத்திரையிடப்படாமல் பயன்பாட்டில் உள்ள தராசுகள், எடைகள், எடை அளவைகள் கண்டறியப்பட்டால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.