ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேலூரில் சிறப்பு குறைகேட்பு முகாம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் 20-ஆம் தேதி வேலூா் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளதையொட்டி சிறப்பு குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:20 pm

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் 20-ஆம் தேதி வேலூா் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளதையொட்டி சிறப்பு குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்று மனுக்கள் பெற்றனா்.

வேலூா் மாவட்டத்துக்கு 20-ஆம் தேதி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலைத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா்.

முதல்வா் வருகையையொட்டி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலூா் தொரப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து மனுக்கள் பெற்றாா். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓய்வூதியம், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனா்.

முதல்வா் வருகையையொட்டி சிறப்பு குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் மனுக்களை வழங்கினால் அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி முதல்வா் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்தும் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

முகாமில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.