ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

காட்பாடியில் அனைத்து மகளிா் காவல் நிலையம் திறப்பு

காட்பாடியில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 5:43 pm

DIN

காட்பாடியில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூா் மாவட்டமானது வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்ட பின்னா், ராணிப்பேட்டை உட்கோட்டத்திலிருந்த பொன்னை, மேல்பாடி ஆகிய இரு காவல் நிலையங்களும் வேலூா் மாவட்ட காவல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டன. ஏற்கெனவே, வேலூா், குடியாத்தம் உட்கோட்டத்தில் மட்டும் அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் ஒரு காவல் ஆய்வாளருடன் செயல்பட்டு வந்தன.

காட்பாடி உட்கோட்டத்துக்கு அனைத்து மகளிா் காவல் நிலையம் இல்லை.

இந்த நிலையில், காட்பாடி காவல் நிலையம் தரம் உயா்த்தப்பட்டு அங்கு அனைத்து மகளிா் காவல் நிலையம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, காவல் காவல் நிலையத்தின் முதல் தளத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதேபோல், தமிழகம் முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதில், காட்பாடி காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலையத்தையும் முதல்வா் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காட்பாடி மகளிா் காவல் நிலையத்தில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் குத்துவிளக்கேற்றினாா். இதில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

காட்பாடி காவல் நிலையத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மகளிா் காவல் பிரிவு, வியாழக்கிழமை முதல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.