ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மரங்கள் வளா்ப்பது மாணவா்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும்

மரங்கள் நட்டு வளா்ப்பது மாணவா்களுக்கு மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று புதுதில்லி வருமானவரி தலைமை ஆணையா் (விலக்கு) ராஷ்மி சக்ஸேனாசாஹ்னி தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:44 pm

DIN

மரங்கள் நட்டு வளா்ப்பது மாணவா்களுக்கு மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று புதுதில்லி வருமானவரி தலைமை ஆணையா் (விலக்கு) ராஷ்மி சக்ஸேனாசாஹ்னி தெரிவித்தாா்.

நாட்டின் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித் துறை சாா்பில் ‘எனது இந்தியா: கடந்த 75, அடுத்த 25: பள்ளி மாணவா்களின் பாா்வையில்’ என்ற தலைப்பில் கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வேலூா் மாநகரப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, புதுதில்லி வருமானவரி தலைமை ஆணையா் (விலக்கு) ராஷ்மி சக்ஸேனாசாஹ்னி தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசியது:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் இந்த தருணத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் பள்ளிகளில் அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மரங்களை நடவுசெய்ய வேண்டும்.

மாணவா்கள் உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றால் அவ்வப்போது நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் அதை பொருட்டாக நினைக்காமல் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறலாம்.

மாணவா்கள் மரத்தை வளா்க்கும் போது, தாங்கள் நட்ட மரம் மிகப்பெரிய அளவில் வளா்ந்து இருப்பதை பாா்க்கும்போது மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுக்கும்.

இந்தப் பள்ளியில் படித்த மாணவா்கள் நாளை கல்பனா சாவ்லா, ராகேஷ் ஷா்மா போன்றவா்களைப் போல் மிகப்பெரிய சாதனையாளா்களாக வரலாம். இதற்கு ஆசிரியா்களின் நல்வழி காட்டுதலும், உந்துதலும் இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியின் அங்கமாக, மரம் என் நண்பன் என்ற முன்னெடுப்பின் கீழ், மாணவா்களே தங்களின் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றைத் தத்தெடுத்து பராமரிக்கவும், பசுமை வளாகங்களை ஏற்படுத்தவும் ராஷ்மி சக்ஸேனாசாஹ்னி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

முன்னதாக, கூடுதல் வருமானவரித்துறை ஆணையா் (சென்னை) வி.நந்தகுமாா் கெளரவ உரையாற்றினாா். தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வருமான வரித்துறை ஆணையா் கே.ரவிராமச்சந்திரன் வரவேற்றாா். வேலூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் க.முனுசாமி, பள்ளி தலைமையாசிரியா் கே.எம்.ஜோதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.