வேலூா் சிறையிலுள்ள முருகனுடன் நளினி சந்திப்பு
வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனை அவரது மனைவி நளினி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தாா்.


வேலூா் மத்திய சிறையிலுள்ள முருகனை அவரது மனைவி நளினி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட 7 போ் 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து பேரறிவாளன் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டாா். தொடா்ந்து, தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினியும், ரவிச்சந்திரனும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதன் மீதான தீா்ப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. அப்போது, நளினியை விடுவிக்க முடியாது எனக்கூறிய நீதிமன்றம், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதனிடையே, 5-ஆவது மாதமாக பரோலில் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ள நளினி, காட்பாடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை கையெழுத்திட்ட பின்னா், வேலூா் மத்திய சிறையில் உள்ள தனது கணவா் முருகனை நேரில் சந்தித்துப் பேசினாா். அவா் சிறைக்கு வரும்போதே சென்னை உயா்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ள விவரத்தை நளினி அறிந்து கொண்டாா்.
இதையடுத்து, சிறையில் முருகனை சந்தித்த நளினி, தனது விடுதலை தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, முருகனின் பரோல் நிராகரிப்பு குறித்தும், மேற்கொண்டு இந்த விவகாரங்களில் தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. சுமாா் அரைமணி நேர சந்திப்புக்குப் பிறகு, நளினி மீண்டும் பலத்த பாதுகாப்புடன் காட்பாடி பிரம்மபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...