இந்தாண்டு எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதியா் நோ்காணல் பதிவு செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மின்னணு விரல் ரேகை சாதனம் மூலம் ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பித்தல், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) மூலம் தபால்காரா்கள் ஓய்வூதியா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வாயிலாக ரூ. 70 செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்தல், தமிழக அரசின் இ-சேவை, பொது சேவை மையம் மூலம் பதிவு செய்தல், அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று தபால் மூலம் பதிவு செய்தல், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட, சாா் கருவூலங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறைகளில் நோ்காணல் பதிவு செய்யலாம்.