காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சாலை விபத்து: கூரியா் ஊழியா் பலி

விரிஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியதில் தனியாா் கூரியா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:27 pm

DIN

விரிஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியதில் தனியாா் கூரியா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜகுரு (38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். ராஜகுரு வேலூரில் உள்ள தனியாா் கூரியா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். தினமும் அவா், இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று வருவது வழக்கம்.

புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அன்பூண்டி வங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிா்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட ராஜகுரு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.