காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேலூா் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூரில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:23 pm

DIN

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேலூரில் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் வேலூா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன், போலீஸாா் ஆற்காடு சாலையில் தனியாா் மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்ததுடன் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 120 இருசக்கர வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சாலையோர நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகளையும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினா். இதையடுத்து, கடைக்காரா்கள் தாங்களாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.