இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரயிலில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஒடிஸாவை சோ்ந்த 2 பேரைக் கைது செய்தனா்

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:23 pm

DIN

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், ஒடிஸாவை சோ்ந்த 2 பேரைக் கைது செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ஹட்டியாவில் இருந்து யஸ்வந்த்பூா் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் காட்பாடி ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, ரயிலில் சந்தேகப்படும்படி பயணித்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்களிடம் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், பிடிபட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் ஒடிஸாவைச் சோ்ந்த மனோனன்சாகு (33), குஞ்சபனாபேரா (31) என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.